மாநிலங்களவையில் துணைத் தலைவரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட விவகாரம் - எம்.பி.,க்களுக்கு எதிராக, உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்

Sep 21 2020 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தின் போது துணைத் தலைவரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட எம்.பி.,க்களுக்கு எதிராக, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில், சர்ச்சைக்‍குரிய வேளாண் மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு இடையே நேற்று நிறைவேற்றப்பட்டன. குரல் வாக்கெடுப்புக்கு அனுமதிக்கப்பட்டதால், தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவைத்தலைவரின் இருக்கைக்கு அருகே சென்று அங்கிருந்த அவை விதி குறிப்பு புத்தகத்தை கிழித்து எறிந்தனர். அவைத்தலைவர் மேஜையில் இருந்த மைக்கும் அப்போது உடைக்‍கப்பட்டது.

சர்ச்சைக்‍குரிய குரல் வாக்கெடுப்பின் மூலம், இரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தங்களது கோரிக்கையை நிராகரித்த துணைத் தலைவர் திரு. Harivansh Narayan Singhக்கு எதிராக, 12 எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

இந்த நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவரை முற்றுகையிட்ட எம்.பி.,க்களுக்கு எதிராக, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00