கொரோனா ஊரடங்கு தளர்வுக்‍குப் பிறகு 7 மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறப்பு - ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகள் நடவடிக்‍கை

Sep 21 2020 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கில் அறிவிக்‍கப்பட்ட தளர்வுகளையடுத்து, 6 மாதங்களுக்‍குப்பிறகு ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட 7 மாநிலங்களில் பள்ளிகள் இன்று திறக்‍கப்பட்டன.

மத்திய அரசு வெளியிட்ட நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை, விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்‍கு இன்று முதல் பள்ளிகள் இயங்கலாம் என அனுமதி அளிக்‍கப்பட்டது. அதன்படி, ஆந்திரா, அசாம், ஹரியானா, மேகாலயா, ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, மத்தியப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் இன்று வகுப்புகள் தொடங்கின. முதல்கடட்டமாக 15 நாட்களுக்‍கு வகுப்புகளை நடத்த மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. அதன்பிறகு சூழலை கருத்தில்கொண்டு வகுப்புகளை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும், மாணவர்கள் வருகை கட்டாயம் இல்லை என்றும், விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதல் பெற்று வரலாம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை பரிசோதனை, முகக்‍கவசம், கிருமிநாசினி, தனிமனித இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00