கர்நாடக வனப் பகுதியிலிருந்து இடம் மாறிய நூற்றுக்‍கும் மேற்பட்ட யானைகள் - கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையோர மக்‍கள் அச்சம்

Sep 21 2020 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து நூற்றுக்‍கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதால் கிராம மக்‍கள் அச்சமடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த 130 யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வழியாக அஞ்செட்டி, அய்யூர், தேன்கனிக்கோட்டை, சானமாவு ஆகிய வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ள இந்த யானைகள், விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்து, மக்களை அச்சுறுத்தும் என்பதால் அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இரவு நேரங்களில் வனப்பகுதியையொட்டி கிராமங்களுக்‍கு யானைகள் இடம்பெறக்‍கூடும் என்பதால், போலகரை, மல்லேஷ்வரம், தேவரப்பெட்டா உள்ளிட்ட கிராம மக்‍களுக்‍கு வனத்துறையினர் எச்சரிக்‍கை விடுத்துள்ளனர். விவசாயிகள், பொதுமக்‍கள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும், யானைக்‍கூட்டத்தைக்‍ கண்டவுடன் தகவல் தெரிவிக்‍க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00