அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதால் குழந்தைகளுக்‍கு உணவளிக்‍க உத்தரவிடக்‍கோரி தொடரப்பட்ட வழக்‍கு - மத்திய -மாநில அரசுகள் பதிலளிக்‍க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Sep 21 2020 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கு காரணமாக அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதால் பசியால் வாடும் குழந்தைகளுக்‍கு உணவளிக்‍க உத்தரவிடக்‍கோரி தொடரப்பட்ட பொது நல வழக்‍கில், மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்‍க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டிலுள்ள 14 லட்சம் அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக குழந்தைகள் பசியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, உச்சநீதிமன்றத்தில், தீபிகா ஜெகத்ராம் சஹானி என்பவர், பொது நல வழக்‍கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு, குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்‍கு உணவு வழங்குவதற்கு நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென மனுவில் கேட்டுக்‍கொண்டுள்ளார். மனுவை விசாரணைக்‍கு ஏற்ற உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்‍க உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, ஊரடங்கால் பாதிக்‍கப்பட்டுள்ள பாலியல் தொழிலாளர்களுக்‍கு நிவாரணம் வழங்கக்‍கோரி தொடரப்பட்ட வழக்‍கில், மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்‍க உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் பாலியல் தொழிலாளர்களும் இன்னலுக்‍கு ஆளாகி இருப்பதாகவும், இது அவசரமாக கருதப்பட வேண்டிய விஷயம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00