நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண் சட்டங்கள் சிறப்புக்குரியவை - பிரதமர் நரேந்திர மோதி பெருமிதம்

Sep 21 2020 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் சிறப்புக்குரியவை என்றும், அதன் பயன்களை விவசாயிகள் ஏற்கனவே அனுபவிக்‍கத் தொடங்கிவிட்டனர் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் 9 நெடுஞ்சாலை திட்டங்களுக்‍கு பிரதமர் திரு. மோதி, இன்று அடிக்‍கல் நாட்டினார். காணொலி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பீகார் முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய திரு. மோதி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்‍கவை என்று தெரிவித்தார். விவசாய சீர்திருத்தங்களின் பயன்களை ஏற்கனவே விவசாயிகள் அனுபவிக்கத் தொடங்கிவிட்டதாக கூறினார். பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 25 சதவீதம் கூடுதல் விலை கிடைத்துள்ளதாக தெரிவித்த பிரதமர், வேளாண் சட்டங்களால் விளைபொருள் சந்தைகள் மூடப்படாது என்று உறுதி அளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00