நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு - வரும் 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு

Sep 22 2020 8:08AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய பாரதிய ஜனதா அரசின் இந்த நடவடிக்கைக்கு, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ஏ.கே. அந்தோணி தலைமையில், பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம், டெல்லியில் நேற்று நடைபெற்றது. வேளாண் மசோதாக்களுக்கு எதிராக, விவசாயிகள் மற்றும் ஏழைகளிடமிருந்து, 2 கோடி கையெழுத்துகளைப் பெற, இந்தக் கூட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரு. ஏ.கே. அந்தோணி, விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டத்திற்கு எதிராக, வரும் 24-ம் தேதி, நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00