மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் - நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் விடிய விடிய போராட்டம்

Sep 22 2020 8:11AM
எழுத்தின் அளவு: அ + அ -
மாநிலங்களவை எம்.பி.க்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிக்கள் இணைந்து நாடாளுமன்றத்தில் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டன.

பல்வேறு அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வேளாண் மசோதாக்‍கள் மாநிலங்களவையில் குரல் வாக்‍கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அப்போது எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். இந்நிலையில், அமளியில் ஈடுபட்டதாகக்‍கூறி 8 எம்.பி.க்‍களை ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்வதாக அவைத்தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு உத்தரவு பிறப்பித்தார். உறுப்பினர்கள் திரு. தெரிக் ஓ பிரையன், திரு. இளமாறன் கரீம், திரு. சஞ்சய் சிங், உள்ளிட்ட எம்.பி.க்கள் இடைநீக்‍கம் செய்யப்பட்டனர். மேலும், மாநிலங்களை துணைத் தலைவர் மீதான நம்பிக்‍கையில்லா தீர்மானமும் நிராகரிக்‍கப்பட்டது. இதனிடையே எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00