கர்நாடக மாநிலத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் - பெங்களூருவில் இன்று அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

Sep 22 2020 9:05AM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், பெங்களூருவில் இன்று அடைமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக உடுப்பி, தட்சிண கன்னடம், உத்தர கன்னடம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. உடுப்பியில் வரலாறு காணாத மழை பெய்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கிய மக்களை இயற்கை பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மைசூரு, குடகு உள்பட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள வானிலை ஆய்வு மையம், கர்நாடகத்தில் இன்றுமுதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், பெங்களூருவில் இன்று மழை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00