மகாராஷ்டிராவில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு - காயமடைந்தோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Sep 22 2020 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி பகுதியில், படேல் காம்பவுண்டில் இருந்த கட்டடம் நேற்று அதிகாலை இடிந்து விழுந்ததில், கட்டடத்திற்குள் உறங்கிக் கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. சுமார் 36 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் மேலும் 10 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை தற்போது 20 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவ பகுதியில் மீட்பு பணி 2வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இவ்விபத்து தொடர்பாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00