வேளாண் மசோதா விவகாரத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடியவிடிய தர்ணா - போராட்டக்களத்தில் மாநிலங்களவை துணைத்தலைவர் கொடுத்த தேநீரை வாங்க மறுப்பு

Sep 22 2020 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்ற வளாகத்தில் விடியவிடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.பிக்‍களை தேநீருடன் வந்து சமரசம் செய்ய முயன்ற மாநிலங்களவை துணைத்தலைவரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அவர் வழங்கிய தேநீரை அருந்த எம்.பிக்கள் மறுத்துவிட்டனர்.

வேளாண் மசோதாக்‍களுக்‍கு எதிராக மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில், எம்.பிக்‍கள் திரு.டெரிக் ஓ பிரையன், திரு.கே.கே.ராஜேஷ், திரு.ராஜீவ் சத்வவ், திரு.சஞ்சய் சிங் உள்ளிட்ட 8 பேரை, மாநிலங்களவைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு, ஒரு வார காலத்திற்கு அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். அவையிலிருந்து வெளியேற மறுத்த எம்.பிக்‍கள், நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். விடியவிடிய அவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள 8 எம்.பி.க்களை தேநீர் கொண்டுவந்து மாநிலங்களவை துணைத்தலைவர் திரு.ஹரிவன்ஷ் சமரசம் செய்ய முயன்றார். ஆனால், அவர் வழங்கிய தேநீரை அருந்த எம்.பிக்கள் மறுத்துவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00