அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து தானியங்கள், பருப்பு வகைகள், போன்றவற்றை நீக்கும் அத்தியாவசியப் ‍பொருட்கள் சட்டத்திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்

Sep 22 2020 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அகற்றும் அத்தியாவசியப் ‍பொருட்கள் சட்டத்திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து, தானியங்கள், பருப்பு வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றை நீக்குவது என, சில மா‌தங்களுக்கு முன்பு நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக, அத்தியாவசியப் பொருட்கள் அவசர சட்டமும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலும் பெறப்பட்டது.

இந்நிலையில் இன்று, நாடாளுமன்ற மாநிலங்களவையில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை நீக்கப்படுகின்றன.

எட்டு எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததால், குரல் வாக்கெடுப்பின்றி அத்தியாவசியப் ‍பொருட்கள் சட்டத்திருத்த மசோதா நி‌றைவேற்றப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00