நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட எம்.பி.க்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றனர் - சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெறாவிட்டால் கூட்டத்தொடரை எதிர்க்‍கட்சிகள் முழுமையாக புறக்‍கணிக்‍கும் என காங்கிரஸ் எச்சரிக்கை

Sep 22 2020 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
சஸ்பெண்ட் உத்தரவுக்‍கு எதிரான தர்ணா போராட்டத்தை 8 எம்.பிக்‍கள் வாபஸ் பெற்றனர். தங்களுக்‍கு ஆதரவாகவும், வேளாண் மசோதாக்‍களுக்‍கு எதிராகவும் கூட்டத்தொடரை எதிர்க்‍கட்சிகள் புறக்‍கணித்ததைத் தொடர்ந்து இந்த முடிவை அவர்கள் மேற்கொண்டனர்.

வேளாண் மசோதாக்‍களுக்‍கு எதிராக மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில், எம்.பிக்‍கள் திரு.டெரிக் ஓ பிரையன், திரு.கே.கே.ராஜேஷ், திரு.ராஜீவ் சத்வவ், திரு.சஞ்சய் சிங் உள்ளிட்ட 8 பேரை, மாநிலங்களவைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு, ஒரு வார காலத்திற்கு அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். அவையிலிருந்து வெளியேற மறுத்த எம்.பிக்‍கள், நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் இந்த தர்ணாவை முடித்து கொண்டனர்.

தங்களுக்‍கு ஆதரவாகவும், வேளாண் மசோதாக்‍களுக்‍கு எதிராகவும் கூட்டத்தொடரை எதிர்க்‍கட்சிகள் புறக்‍கணித்ததைத் தொடர்ந்து இந்த முடிவை மேற்கொண்டதாக காங்கிரஸ் எம்.​பி. திரு.சயித் நசிர் உசேன் தெரிவித்தார். தங்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை மட்டுமன்றி வேளாண் மசோதாக்‍களை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்‍கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00