நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு - பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 பேர் விசாரணைக்‍கு ஆஜராகுமாறு என்.சி.பி. சம்மன்

Sep 23 2020 8:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான, போதைப்பொருள் வழக்‍கில், பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலிகான், ரகுல் பிரீத்சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத், கடந்த ஜுன் மாதம் 14-ம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். சுஷாந்த் மரணம் தொடர்பாக, அவரது முன்னாள் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தி மீது, மத்திய புலனாய்வுத்துறை CBI, அமலாக்கப்பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. சுஷாந்த்சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியது தொடர்பாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நடிகை ரியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் பயன்படுத்துவது மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மேலும் பல பிரபலங்களின் பெயர்கள் வெளிவந்தன.

இந்நிலையில், பிரபல ஹிந்தி மற்றும் தெலுங்கு நடிகைகளான தீபிகா படுகோனே, சாரா அலிகான், ரகுல் பிரீத்சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி அடுத்த 3 நாட்களில் அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரபல ஹிந்திப்பட இயக்‍குநர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற, போதைப்பொருள் விருந்தில், பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்‍குநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட வீடியோ, அண்மையில் வெளியானது. இதுதொடர்பான புகாரின் பேரில் அந்த வீடியோவை ஆய்வு செய்துவரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஆடம்பர விருந்தில் பங்கேற்றவர்களின் நடவடிக்‍கைகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00