வேளாண் மசோதா விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காகவே எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன - மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றச்சாட்டு

Sep 24 2020 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்‍கட்சிகள் வேளாண் மசோதாக்‍கள் குறித்து எதுவும் பேசவில்லை என்றும், அரசியல் காரணங்களுக்‍காகவே தற்போது போராட்டங்களை நடத்துவதாகவும், மத்திய வேளாண்முறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மசோதாவை திரும்பப்பெற பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இன்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நாளை நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் விடுத்துள்ள அழைப்புக்‍கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்‍கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்‍கட்சிகள் வேளாண் மசோதாக்‍கள் குறித்து எதுவும் பேசவில்லை என்றும், அரசியல் காரணங்களுக்‍காகவே தற்போது போராட்டங்களை நடத்துவதாகவும், மத்திய வேளாண்முறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டியுள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், மாநிலங்களவையில், 4 மணி நேரம் விவாதம் நடைபெற்றதாகவும், அப்போது காங்கிரஸ் நடந்து கொண்டவிதம் ஜனநாயக விரோதமானது என்றும் தெரிவித்தார். சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளாமல் விவசாயிகளுக்‍கு நன்மை விளையாது என்றும் திரு. தோமர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00