இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன், பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை : பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல்

Sep 25 2020 9:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன், பிரதமர் திரு. நரேந்திர மோதி, காணொலி காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

இலங்கை பிரதமராக மீண்டும் ராஜபக்சே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருடன் ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையின் போது, பிராந்திய ஒத்துழைப்பு, இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கக் கூடும் எனத்தெரிகிறது.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் ராஜபக்சே, அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் பரஸ்பரம் ஆர்வமுள்ள பிற விவகாரங்கள் தொடர்பான இரு தரப்புக்கு இடையிலான பன்முக உறவை மறுபரிசீலனை செய்யவதை எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு. மோதி, இருதரப்பு நட்புறவை விரிவாக்கம் செய்ய தான் ஆர்வமாக இருப்பதாகவும், கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் நமது கூட்டுறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளை நாம் ஆராயவேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00