கொரோனா வைரஸ் தொற்றை தடுக்‍க ஊரடங்கு பிறப்பிக்‍கப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவு - நாடு முழுவதும் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் நீடிக்கிறது ஊரடங்கு

Sep 25 2020 9:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன.

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் துவங்கிய கொரோனா வைரஸ், உலகெங்கும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் இதனைக்‍ கட்டுப்படத்த கடந்த, மார்ச், 24ம் தேதி, தொலைக்‍காட்சியில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கொரோனா பரவலை தடுப்பதற்காக, 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். அப்போது, 500க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது. அதில், 12 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து ஊரடங்கு அமலுக்கு வந்து, ஆறு மாதங்கள் நிறைவடையும் நிலையில், நாடு முழுவதும் தற்போது 57 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 91 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில், அதிக பாதிப்பில், அமெரிக்காவுக்கு அடுத்ததாக, இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

கடந்த ஆறு மாதங்களில், நாடு முழுவதும் அதிக அளவில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி கண்டு பிடிப்பதற்கான முயற்சிகள் வேகம் எடுத்து வரும் நிலையில், வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை. அடுத்த, இரண்டு மாதங்களில், இதன் தாக்கம் குறையலாம் என எதிர்பார்ப்பதாக மருத்துவ நிபுணர்கள் நம்பிக்‍கை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00