சென்னையிலிருந்து கேரளா, கர்நாடகாவுக்கு வரும் ஞாயிற்றுக்‍கிழமை முதல் ரயில் போக்குவரத்து - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

Sep 25 2020 9:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையிலிருந்து கேரளா, கர்நாடகாவுக்கு வரும் ஞாயிற்றுக்‍கிழமை முதல் ரயில் போக்குவரத்து தொடங்குகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தெற்கு ரயில்வே முக்கிய நகரங்களுக்கு இடையே ரயில்வே போக்குவரத்தினை நிறுத்தியிருந்தது. இந்நிலையில், 6 மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு கேரளா மற்றும் கர்நாடகா இடையே சென்னையிலிருந்து வரும் ஞாயிற்றுக்‍கிழமை முதல் ரயில் போக்‍குவரத்து தொடங்கப்படவுள்ளது. சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு வரும் 27-ம் தேதியிலும், சென்னை-மங்களூரு இடையே வரும் 28-ம் தேதியிலும் ரயில் போக்குவரத்து ​தொடங்குகிறது. சென்னை - மைசூரு இடையேயான ரயில் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் மாலை 7.45 க்கு கிளம்பி திருவனந்தபுரத்திற்கு மறுநாள் காலை 11.45 க்கு சென்றடையும். திரும்ப மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு சென்னை வந்தடையும்.

சென்னையிலிருந்து மங்களூருக்கு இரவு 8.10 க்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.10 க்கு மங்களூரு சென்றடையும். திரும்பவும் பிற்பகல் 1.30 க்கு மங்களூருவிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.30க்கு சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00