தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்துவதில் கேரள அரசுக்‍கு விருது - ஐ.நா. அறிவிப்பு

Sep 25 2020 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்பையும், பாதிப்பையும் குறைத்த கேரள அரசுக்கு, ஐ.நா.சபை பாராட்டு தெரிவித்தது.

ஐ.நா. சபை சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 23-ம் தேதி பொதுச் சேவை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா வைரஸை பரவலைக் கட்டுப்படுத்தி உயிரிழப்பையும், பாதிப்பையும் குறைத்த கேரள அரசுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. ஐ.நா.வின் வெப் தொலைக்காட்சி மூலம் இந்தப் பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ஐ.நா. தலைவர் திஜானி முகமது பன்டே, கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் சின் யங், உலக சுகாதார அமைப்பன் தலைவர் மருத்துவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ், எத்தியோப்பியா அதிபர் ஷாலே வொர்க் ஜூடே, ஐ.நா. மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றேனர்.

இந்தியாவின் சார்பில் கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா இதில் பங்கேற்று பேசினார். கேரளாவில் கடந்த இருமுறை ஏற்பட்ட மழை வெள்ளக் காலத்தைச் சமாளித்த அனுபவம், நிபா வைரஸைத் திறம்படக் கையாண்ட முறை, தற்போது கொரோனா வைரஸ் பரவலை எளிதாகக் கட்டுப்படுத்த உதவியதாக தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படத் தொடங்கியதிலிருந்து கேரள அரசு விழிப்புடன் செயல்பட்டு, தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களைப் பின்பற்றத் தொடங்கியது என அவர் மேலும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00