புதிய வேளாண் சட்டத்துக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்துக்கு கர்நாடக போலீசார் அனுமதி மறுப்பு - தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை

Sep 28 2020 10:14AM
எழுத்தின் அளவு: அ + அ -
விவசாயிகளுக்‍கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து கர்நாடக மாநிலத்தில் இன்று விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கர்நாடகாவில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி மற்றும் 21 விவசாய சங்கங்கள் இணைந்து இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கர்நாடகாவில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு நடத்த தேசிய வர்த்தக சங்கம் மற்றும் 21 விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், பேரணி, போராட்டம் ஆகியவற்றை நடத்த அனுமதி இல்லை என்றும் கர்நாடக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக விதிமுறைகள் அமலில் இருப்பதால், தடையை மீறுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் பிரமாண பத்திரம் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு அதனை கொடுக்காமல் யாரும் இப்போராட்டத்தில் ஈடுபட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00