வேளாண் சட்டங்களுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் டிராக்‍டருக்‍கு தீ வைப்பு - இளைஞர் காங்கிரஸாரின் போராட்டத்தில் பரபரப்பு

Sep 28 2020 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் அருகே, டிராக்‍டருக்‍கு தீ வைக்‍கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்திருப்பது விவசாயிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்‍கப்பட்ட நிலையில், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்‍கு எதிர்க்‍கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பஞ்சாபில், முதலமைச்சர் திரு. அமரீந்தர் சிங்கும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே டெல்லியில் இன்று காலை இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டதில், இந்தியா கேட் அருகே டிராக்‍டருக்‍கு தீ வைக்‍கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீயை அணைத்த டெல்லி போலீசார் இந்தியா கேட் பகுதியில் நிலைமையை கட்டுக்‍குள் கொண்டு வந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00