கொரோனா காலகட்டத்தில் வங்கிக்‍கடன் வசூலிப்பது தொடர்பான வழக்கு - மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியதால், வழக்‍கு விசாரணை வரும் 5ம் தேதிக்‍கு ஒத்திவைப்பு

Sep 28 2020 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா காலகட்டத்தில் வங்கிக்‍கடன் வசூலிப்பது தொடர்பான வழக்‍கில், மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியதால், வழக்‍கு விசாரணையை வரும் 5ம் தேதிக்‍கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தவணை வசூலிப்பதை, கடந்த மார்ச் மாதம்முதல், மே மாதம் வரை 3 மாதங்கள் வங்கிகள் நிறுத்திவைக்‍க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது. பின்னர், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மேலும் 3 மாதங்களுக்கு இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த 6 மாத தவணைகளும் கடன் தவணை கால இறுதியில் வசூலிக்கப்படும் எனவும், இந்த 6 மாத காலத்துக்கு உரிய வட்டியும் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்றும் வங்கிகள் அறிவித்தன.

ஏற்கனவே கடனுக்கான மாத தவணையில் அசலுடன் வட்டியையும் சேர்த்தே வங்கிகள் வசூலிப்பதால், வட்டி மீது வட்டி வசூலிக்கும் இந்த நடைமுறையை எதிர்த்து கஜேந்திர ஷர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி அஷோக் பூஷன் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த விவகாரம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாததற்கு மத்திய அரசு சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

வட்டி மீது வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதற்காக கூடுதல் அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக்‍ கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை, வரும் 5-ம் தேதிக்‍கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00