கர்நாடகாவில் மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக தடையை மீறி போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது - பிரதமர் மற்றும் எடியூரப்பாவின் உருவ பொம்மைகளுக்கு தீ வைத்து எதிர்ப்பு

Sep 28 2020 2:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்‍கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த சட்டங்களை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி மற்றும் 21 விவசாய சங்கங்கள் இணைந்து முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் வழக்‍கம்போல் இயங்கி வருகின்றன. பெங்களூருவில் மெட்ரோ ரயில் ரயில்கள் இயக்‍கப்படுகின்றன. பால், மருந்துக்‍கடைகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இயங்கி வருகின்றன. ஆட்டோக்‍கள், கார்கள் ஓடவில்லை. எனினும், விமான நிலையத்திற்கு இயக்‍கப்படும் வாடகைக்‍கார்களின் சேவையில் பாதிப்பில்லை. முழு அடைப்பு காரணமாக இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தவைக்‍கப்பட்டு, வரும் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.

பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் அனைத்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், மங்களூருவிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

ஹுப்ளியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர், பிரதமர் மோதி மற்றும் முதலமைச்சர் எடியூரப்பாவின் உருவபொம்மைகளை தீயிட்டுக்‍கொளுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00