வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக காங்கிரஸ் வன்முறையை தூண்டி வருகிறது - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டனம்

Sep 28 2020 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக விவசாயிகளின் பெயரில் காங்கிரஸ் வன்முறையை தூண்டி வருவதாக மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில், பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று காலை நடைபெற்ற போராட்டத்தில் இந்தியா கேட் அருகே டிராக்டர் ஒன்று எரிக்கப்பட்டது. உடனடியாக தீயை அணைத்த போலீசார், சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். காங்கிரசின் இந்த போராட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும், விவசாயிகளின் பெயரில் காங்கிரஸ் தனது உண்மையான நிறத்தை காட்டிவிட்டதாகவும், விவசாயிகளை தவறாக வழிநடத்தும் காங்கிரஸின் நடவடிக்கை கண்டத்துக்குரியது என்றும் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதானுக்‍கு பஞ்சாப் முதலமைச்சர்​திரு. அமரீந்தர் சிங் பதிலளித்துள்ளார். பஞ்சாபில் விவசாயிகளுடன் தர்ணாவில் கலந்துகொண்ட அவர், தன்னிடம் உள்ள டிராக்‍டரை எரிப்பதால் யாருக்‍கு என்ன தொந்தரவு எனக்‍ கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் தேச விரோதம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00