போதைப் பொருள் வழக்கு - நடிகைகள் ராகிணி, சஞ்சனா, தொழிலதிபர் ராகுல் ஜாமின் மனுக்‍கள் தள்ளுபடி - மேலும் 14 நாட்கள் நீதிமன்றக்‍ காவல்

Sep 28 2020 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெங்களூரு போதைப் பொருள் வழக்கில், நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, தொழிலதிபர் ராகுல் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், மேலும் 14 நாட்கள் அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகை ராகிணி திவேதியை போதைப்‍பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, நடிகை சஞ்சனா கல்ராணி, தொழிலதிபர் ராகுல் ஆகியோரை போதைப்‍பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மூன்று பேரும் நீதிமன்றக் காவலில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, தொழிலதிபர் ராகுல் ஆகியோர் ஜாமின் கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, ஜாமின் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மூன்று பேரின் ஜாமின் மனுக்க‌ளை நிராகரித்த சிறப்பு நீதிமன்றம், மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00