அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் - அத்வானி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்தது லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

Sep 30 2020 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாபர் மசூதி இடிப்பு வழக்‍கில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திரு. அத்வானி, திரு. முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமா பாரதி உள்ளிட்ட அனைவரையும் லக்‍னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்தது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்‍கை விசாரித்த ரேபரேலி நீதிமன்றம் இவ்வழக்‍கில் குற்றம்சாட்டப்பட்ட 68 பேரையும் விடுவித்தது. இந்த தீர்ப்பை அலகாபாத் நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால், குற்றவாளிகளின் விடுதலைக்கு சட்டரீதியாக முகாந்திரம் இல்லை எனக்‍ கூறிய உச்சநீதிமன்றம், 2017ம் ஆண்டு அலகாபாத் தீர்ப்பை நிராகரித்தது. நாள்தோறும் விசாரணை நடத்தி 2 வருடத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று லக்‍னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து வழக்‍கை விசாரித்துவந்த லக்‍னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. திரு. அத்வானி, திரு. முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமா பாரதி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்‍கு எதிராக வலுவான ஆதாரம் இல்லை என்றும், மசூதி இடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00