காஷ்மீரில் என்கவுண்டரின்போது தனியாக சிக்‍கிய தீவிரவாதியை அன்பால் சரணடையச் செய்த ராணுவ வீரர்கள் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

Oct 17 2020 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டரின்போது தனியாக சிக்‍கிய தீவிரவாதி, ராணுவ வீரர்களின் அன்பான பேச்சால் மனம் மாறி சரணடைந்தார். அவருக்‍கு குடிக்‍க தண்ணீர் கொடுத்த இந்திய வீரர்களின் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்‍கையின்போது, ஜஹாங்கீர் என்ற தீவிரவாதி பாதுகாப்புப்படை வீரர்களிடம் தனியாக சிக்‍கினார். அவரிடம் பேச்சுக்‍கொடுத்து சரணடைய செய்யும் முயற்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். ஆயுதங்களைக்‍ கைவிட்டும், குடும்ப சூழ்நிலையை நினைத்தும் சரணடையும்படி வீரர்கள் கேட்டுக்‍கொண்டனர். அவ்வாறு செய்தால் துப்பாக்‍கிச்சூடு நடத்தப்படாது என்றும் உறுதியளித்தனர்.

ராணுவ வீரர்களின் இந்த உருக்‍கமான பேச்சைக்‍ கேட்டு மறைவிடத்திலிருந்து தீவிரவாதி வெளியே வந்தார். அவருக்‍கு இந்திய வீரர்கள் பருகு தண்ணீர் கொடுத்து அமைதிப்படுத்தினர். அப்போது உடனிருந்த தந்தை ராணுவ வீரர்களின் நடவடிக்‍கையைப் பார்த்து நெகிழ்ச்சியுற்று, அவர்களின் காலைத் தொட்டு நன்றி தெரிவித்தார். இந்திய வீரர்களின் மனித நேயத்தை வெளிப்படுத்தும் இந்த காட்சிகளின் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00