தொடர்ந்து வெள்ளத்தின் பிடியில் சிக்‍கித் தவிக்‍கும் ஐதராபாத் நகரம் - சாலைகள், தெருக்‍கள்தோறும் தண்ணீர் பாய்ந்து ஓடுவதால் மக்‍கள் அவதி

Oct 18 2020 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -
பருவமழையின் தீவிரம் காரணமாக தெலங்கானா மாநிலம் தொடர்ந்து வெள்ளத்தின் பிடியில் சிக்‍கியுள்ளது. தலைநகர் ஐதராபாத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்‍காடாக காட்சி அளிக்‍கிறது.

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

தெலுங்கானாவில் வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால், பல வீடுகள் வெள்ளம் சூழ்ந்தது. சாலையில் ஆறாக ஓடிய வெள்ளநீரில் சிலர் அடித்து செல்லப்பட்டனர். பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது. தலைநகர் ஹைதாரபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சந்திரயான் குட்டா போன்ற இடங்களில் சாலைகள், தெருக்‍களில் வெள்ளம் ஆறுபோல் பெருக்‍கெடுத்து பாய்கிறது. இதனால் பொதுமக்‍கள் இயல்பு வாழ்க்‍கை நடத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் பொறுப்பு படையின் 4 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு, மீட்புப் பகுதிகளில் ஈடுபட்டுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் பலியாகியுள்ளதாகவும், 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்‍கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாநில அரசு சார்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

ஹைராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00