உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா மீது தலைமை நீதிபதி பாப்டேவிற்கு புகார் கடிதம் அனுப்பிய விவாகாரம் : ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனுக்கு எதிராக குவியும் புகார்கள்

Oct 18 2020 10:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புகார் கடிதம் அளித்ததற்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன.

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியாக என்.வி.ரமணா இருக்கிறார். இவர், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், ஆந்திர நீதிமன்ற செயல்பாடுகளில் மாநில அரசுக்கு எதிராக தனதுசெல்வாக்கை பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்,ஏ.பாப்டேவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் கடிதம் எழுதினார். இந்நிலையில், நீதிபதி ரமணா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ள ஜெகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் சுனில் குமார் சிங் என்பவர் தலைமை நீதிபதியிடம் கோரியுள்ளார். இந்த நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் நடத்தப்பட்ட உயர்நிலை கூட்டத்தில், ஜெகனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதில், நீதிமன்றத்தின் மாண்பை கெடுக்கும் விதமாக, மூத்த நீதிபதியை பகிரங்கமாக விமர்சனம் செய்ததை அடிப்படையாகக் கொண்டு, அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜெகன் மோகன் மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00