கேரளாவில் புதிதாக 9,016 பேருக்கு கொரோனா தொற்று : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரமாக அதிகரிப்பு

Oct 18 2020 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் நேற்று மேலும் 9 ஆயிரத்து 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் தொடர்ந்து பல நாட்களாக குறைந்த தொற்று எண்ணிக்கை, சமீப நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 9 ஆயிரத்து 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 228 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்புக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 139 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 991 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 96 ஆயிரத்து 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00