முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி : யார் யாருக்கு வழங்குவது என்பது குறித்த பட்டியலை தயார் செய்ய மத்திய அரசு நடவடிக்கை

Oct 18 2020 10:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கான கொரோனா தடுப்பூசியை யார் யாருக்கு வழங்குவது என்பது குறித்த பட்டியலை தயார் செய்யும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உலக நாடகள் தீவிரம் காட்டி வரும் நிலையில்,பல நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகளின் சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனால், இன்னும் 3 மாதத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்கட்டமாக, கொரோனா தடுப்பூசி யார் யாருக்கு போடப்பட வேண்டும் என்பது குறித்து, திட்டங்களை வகுக்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இதன் காரணமாக, தடுப்பூசி யார் யாருக்கு முதல்கட்டமாக போடப்பட வேண்டும் என்பது கோவிட் -19 க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு வரைந்த அமலாக்கத் திட்டத்தின் வரைவு மத்திய முகவர் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு, பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசிகள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவலர்கள் மற்றும், முதியோர், கர்ப்பிணிகள் என தடுப்பூசி போட வேண்டியவர்கள் குறித்த பட்டியல்களை மத்தியஅரசுக்கு அனுப்பி உள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00