ஹத்ராசில், இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் - பாதிக்‍கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம், 5 மணி ‍நேரத்திற்கும் மேல், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை

Oct 18 2020 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராசில், இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரிடம், 5 மணி ‍நேரத்திற்கும் மேல், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராசில், கடந்‌த மாதம், பழங்குடியினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அண்மையில், இளம்பெண் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி தடயங்க‌ளை சேகரித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்ப உறுப்பினர்களிடம், 5 மணி நேர‌த்திற்கும் மேல், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00