வேலையின்மை, வறுமை, பட்டினி குறித்து முதல்வர் நிதிஷ் பேச தயங்குவது ஏன்? - ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி

Oct 18 2020 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேலையின்மை, வறுமை, பட்டினி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச தய‍ங்குவது ஏன்? என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் திரு. தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 28-ம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு. தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில், முதலமைச்சர் நிதிஷ் குமார், முதலமைச்சர் நாற்காலி மீது மட்டும் தான் அன்பு செலுத்தி வருவதாகவும், வேலையின்மையை அகற்றுவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் விமர்சித்தார்.

வறுமை, இடம்பெயர்வு, பட்டினி தொடர்பாக முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசத் தயங்குவதாகக் குற்றஞ்சாட்டிய திரு. தேஜஸ்வி யாதவ், தேசிய ஜனநாயக கூட்டணி தோற்கடிக்கப்படாவிட்டால், தங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது என்பதை இளைஞர்கள் அறிவார்கள் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00