பெண் குழந்தைகளை காக்க பிரச்சாரமா? - குற்றவாளிகளை பாதுகாக்க பிரச்சாரமா? : உ.பி. அரசைச் சாடிய ராகுல், பிரியங்கா

Oct 18 2020 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச மாநிலம், Lakhimpur பகுதியில், பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்ட பா.ஜ.க. ஆதரவாளரை, பா.ஜ.க. எம்.எல்.ஏவும், அவரது மகனும், காவல் நிலையத்தில் இருந்து அழைத்துச் சென்றதற்கு, காங்கிரஸ் எம்.பி. திரு.ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி.பிரியங்கா காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதியில் ,இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்ப்வத்தை தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளும் பா.ஜ.க. அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. தற்போது, Lakhimpur பகுதியில், பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்ட பா.ஜ.க. ஆதரவாளரை, அக்கட்சி எம்.எல்.ஏ. Lokendra Pratap Singh-கும், அவரது மகனும், Mohammadi காவல்நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து, திரு.ராகுல்காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பெண் குழந்தைகளைக் காப்போம்" என்று தொடங்கிய உத்தரப்பிரதேச அரசின் பிரச்சாரம், "குற்றவாளிகளைக் காப்போம்" என போய்க்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

திருமதி.பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், குற்றவாளிகளை காப்பாற்றும் இந்த பிரச்சாரம் எந்த பெயரில் நடக்கிறது - "பெண் குழந்தைகளைக் காப்போம்" என்றா அல்லது குற்றவாளிகளைக் காப்போம் என்றா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00