ஜம்மு-காஷ்மீரில், மாநில கொடியை ஏற்றாமல் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என மெஹ்பூபா முஃப்தி தெரிவித்த கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை - தேசதுரோக வழக்கு பதிவு செய்ய பா.ஜ.க. வலியுறுத்தல்

Oct 24 2020 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு-காஷ்மீரில், அம்மாநில கொடியை ஏற்றாமல், தேசியக் கொடியை ஏற்றவிட மாட்டோம் என முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹ்பூபா முஃப்தி தெரிவித்த கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரை, தேசவிரோத வழக்கில் கைது செய்யவேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான திருமதி. மெஹ்பூபா முஃப்தி, 14 மாதங்களுக்கு பிறகு கடந்த 13-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்‍குப் பின்னர் நேற்று முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சுதந்திர, ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவுடன்தான் தங்களுக்கு இணக்கம் என்றும், இன்றைய இந்தியாவுடன் இணக்‍கம் இல்லை என்றும் கூறினார். ஜம்மு காஷ்மீர் மாநில கொடியை காஷ்மீரில் மீண்டும் ஏற்றாமல், தேசியக்‍ கொடியை உயர்த்தப் போவதில்லை என்று தெரிவித்தார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானில் குரலில் திருமதி. மெஹ்பூபா பேசுவதாகவும், அவரை தேச துரோக வழக்‍கில் கைது செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00