பீஹார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தேர்தல் அறிக்கை வெளியீடு - 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்‍குறுதி

Oct 24 2020 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
பீகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மாநிலத்தில் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்‍குறுதி அளிக்‍கப்பட்டுள்ளது.

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு வரும் 28-ம் தேதி தொடங்கி, மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதலமைச்சர் திரு. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளத்துடன் பா.ஜ.க.வும், திரு. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளத்துடன் காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தலை அறிக்‍கை வெளியிட்ட நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கையை பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்‍கையை வெளியிட்டுப் பேசிய எதிர்க்‍கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளரான திரு. தேஜஸ்வி யாதவ், பீகாரில் கிராமங்களின் வளர்ச்சிக்‍கும், புலம்பெயர் தொழிலாளர்களின் வளர்ச்சிக்‍கும் முன்னுரிமை அளிக்‍கப்படும் எனத் தெரிவித்தார். மாநிலத்தில் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00