ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கை சிபிஐ-யே தொடர்ந்து விசாரிக்கும் - அலகாபாத் உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Oct 27 2020 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பாலியல் வன்டுகொடுமை வழக்‍கை சி.பி.ஐ அமைப்பே ​தொடர்ந்து விசாரிக்‍கும் என்றும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், கடந்த மாதம் 14ம் தேதி, 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிரிழந்த இளம்பெண்ணின் உடல், பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசர கதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக்‍ கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த வழக்‍கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிந்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று உத்தரவை பிறப்பித்தது. அதில், ஹத்ராஸ் பாலியல் சம்பவத்தை சி.பி.ஐ அமைப்பே தொடர்ந்து விசாரிக்‍கும் என்றும், அலகாபாத் உயர்நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் இந்த விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. சி.பி.ஐ விசாரணக்‍குப்பின், இந்த வழக்‍கை உத்தரப்பிரதேசத்திலிருந்து டெல்லிக்‍கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00