நாட்டில் கொரோனா பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில் பீகார் சட்டமன்றத்திற்கு நாளை முதற்கட்ட வாக்‍குப்பதிவு

Oct 27 2020 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டில் கொரோனா பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில், பீகார் மாநில சட்டப்பேரவைக்‍கான முதற்கட்டத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.

பீகார் சட்டமன்றத் தேர்தலில், 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்‍கு நாளை முதல்கட்ட வாக்‍குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஆயிரத்து 66 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 2 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளார்கள். 71 இடங்களில் 35 இடங்களில் முதலமைச்சர் திரு. நிதீஷ்குமாரின் ஜே.டி.யு. கட்சி போட்டியிடுகிறது, அதன் கூட்டணி கட்சியான பா.ஜ.க 29 இடங்களில் போட்டியிடுகிறது. எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி. 42 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

கொரோனா பேரிடருக்கு மத்தியில் நடைபெறும் இந்தத் தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்ச வாக்காளர்களின் எண்ணிக்கையை ஆயிரத்து 600-ல் இருந்து ஆயிரமாக குறைத்துள்ளது. 80 வயதுக்கு அதிகமானோர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு தனி வாக்குப்பதிவு நேரம் மற்றும் அஞ்சல் வாக்குப்பதிவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சுத்திகரிப்பு, வாக்‍காளர்கள் முகக்‍கவசம் அணிவது, வெப்பம் பரிசோதித்தல் போன்றவை உறுதி செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00