உத்தரப் பிரதேசத்தித்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத்தில் அதிருப்தி - பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் கட்சியிலிருந்து விலகியதாக தகவல்

Oct 29 2020 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப் பிரதேசத்தித்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத்தில் அதிருப்தி அடைந்துள்ள பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 6 பேர், அக்கட்சியில் இருந்து விலகயுள்ளதாக கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் 10 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளரும், பீகார் மாநில பொறுப்பாளருமான ராம்ஜி கவுதம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரை முன்மொழிந்து, பகுஜன் சமாஜை சேர்ந்த 10 எம்எல்ஏ.க்கள் வேட்பு மனுவில் கையெழுத்திட்டிருந்தனர். ஆனால், வேட்பு மனுவில் தங்கள் கையெழுத்து போலியாக போடப்பட்டிருப்பதாக, பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 4 பேர் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். அவர்களுடன் மேலும் 2 எம்எல்ஏ.க்கள் இணைந்து தேர்தல் அதிகாரியை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். ஆனாலும், ராம்ஜியின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அதிருப்தி எம்எல்ஏ.க்கள் சமாஜ்வாடி தலைவர் திரு. அகிலேஷ் யாதவை சந்தித்து இருப்பதாகவும், 6 பேரும் கட்சியிலிருந்து விலகப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் விலகல் விவகாரம், உத்திரப்பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00