விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்‍காவிட்டால் இந்தியா தாக்குதல் நடத்தும் - புல்வாமா தாக்குதல் சம்பவம் பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்

Oct 29 2020 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்‍காவிட்டால் இந்தியா தாக்குதல் நடத்தும் என பாகிஸ்தான் அமைச்சர் கூறியதை, அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இந்த சண்டையின் போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் சிறை கைதியாக பிடிபட்டார்.

அபிநந்தனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு இந்தியா அப்போது எச்சரிக்கை விடுத்தது.

இதற்கிடையில், அபிநந்தன் தங்கள் பிடியில் இருந்தபோது இவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளின் உயர்மட்டத்திலான அவசர ஆலோசனை நடைபெற்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அந்த கூட்டத்தில் என்ன நடந்தது, என்னவெல்லாம் பாதிக்கப்பட்டது என்பது குறித்து அக்கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் அயாஸ் சாதிக் தற்போது அதனை நினைவு கூர்ந்துள்ளார். அந்நாட்டு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், கூட்டம் நடைபெறும் அறைக்குள் வந்த ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வாவின் கால்கள் மற்றும் உடல் நடுங்கியதாகவும், வியர்த்து ஊற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, அபிநந்தனை விடுவிக்‍காவிட்டால் பாகிஸ்தான் மீது சரியாக 9 மணியளவில் இந்தியா தாக்குதல் நடத்தும் என்று கூறியதாக சாதிக் நினைவு கூர்ந்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00