பூட்டானின் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பும் பணி தீவிரம் - பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சி

Nov 20 2020 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
இஸ்ரோவின் உதவியுடன் பூட்டானின் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பும் பணி வேகமாக நடைபெற்று வருவதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோதி, கடந்த ஆண்டு அண்டை நாடான பூட்டானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அங்கு இந்தியாவின் பணப் பரிவர்த்தனை அட்டையான Rupay கார்டை அறிமுகப்படுத்தினார். தற்போது 2ம் கட்ட Rupay கார்டு திட்டத்தை, காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு.மோதியும், பூட்டான் பிரதமர் Lotay Tshering-ம் இன்று காணொளி வாயிலாக அறிமுகம் செய்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு. மோதி, அடுத்த ஆண்டு இஸ்ரோவின் உதவியுடன் பூட்டானின் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பும் பணி வேகமாக நடந்து வருவதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நோக்கத்திற்காக, பூட்டானின் 4 விண்வெளி பொறியாளர்கள், வரும் டிசம்பரில் இஸ்ரோவுக்குச் செல்வார்கள் என்றும், அந்த இளைஞர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பூட்டான் பிரதமர் Lotay Tshering பேசுகையில், கொரோனா தடுப்பூசி மருத்துவ பயன்பாட்டிற்கு தயாரானவுடன், பூட்டானுக்கு தடுப்பூசி கிடைக்கும் என உறுதி அளித்தமைக்காக பிரதமர் திரு. மோதிக்‍கும், இந்திய அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுநோயிலிருந்து இந்தியா மிகவும் வலுவாக மீண்டு வரும் என்று நம்புவதாகவும், தடுப்பூசிகளை மேம்படுத்துவதில் இந்தியா எடுக்கும் முயற்சிகள், அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் பூட்டான் பிரதமர் Lotay Tshering தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00