சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும் : சி.பி.எஸ்.இ., செயலர் தகவல்

Nov 21 2020 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டு, கண்டிப்பாக பொதுத் தேர்வுகள் நடக்கும்,'' என, சி.பி.எஸ்.இ., செயலர் அனுராக் திரிபாதி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பெரும்பாலான பள்ளிகள், இதுவரை திறக்கப்பட வில்லை. ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடந்து வருகின்றன. முறையான வகுப்புகள் இதுவரை துவங்கப்படாததால், அடுத்த ஆண்டு, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் நடக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் செயலர் அனுராக் திரிபாதி, ஒரு நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசினார். அப்போது அவர் சி.பி.எஸ்.இ.,யின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் என்றார். அதற்கான அட்டவணை, விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்த அவர், தேர்வுக்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டு வருவதாகவும், அதுகுறித்த விபரங்களை விரைவில் வெளியிடுவோம் என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00