கொரோனா தடுப்பூசி மருந்து, ஆயிரம் ரூபாய்க்கு வினியோகிக்கப்படும் : சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தகவல்

Nov 21 2020 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கி உள்ள, கொரோனா தடுப்பூசி மருந்து, ஆயிரம் ரூபாய்க்கு வினியோகிக்கப்படும்," என, 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், 'ஆஸ்ட்ரா ஜெனகா' நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசி மருந்தின் பரிசோதனைகள், இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இதுவரை நடந்துள்ள பரிசோதனைகளின்படி, இந்த மருந்து, வயதானோருக்கு நல்ல பலன் தருவதாக தெரியவந்துள்ளது. நம் நாட்டில், இந்த தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் உரிமத்தை, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தடுப்பூசி குறித்து பேசிய சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா, தடுப்பூசி மருந்தின், இறுதிகட்ட பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன எனவும் பரிசோதனை முடிவுகள், ஒழுங்குமுறை ஒப்புதல்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், மக்களுக்கு இரண்டு 'டோஸ்' தடுப்பு மருந்து, ஆயிரம் ரூபாய்க்கு வினியோகிக்கப்படும் என தெரிவித்தார். இந்தியாவில் செய்யப்பட்ட பரிசோதனை களின் முடிவுகள், ஒன்றரை மாதங்களில் கிடைத்துவிடும். அதை வைத்து, தடுப்பூசி மருந்தின் செயல்திறனை, நாம் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00