பயணிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் எதிரொலி : ஹாங்காங்கில் ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை

Nov 21 2020 10:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
பயணிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஹாங்காங்கில் ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு முடிவுற்ற நிலையில் ஹாங்காங் - டெல்லி இடையே ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்குக் கடந்த ஜூலை மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி, ஹாங்காங் - டெல்லி இடையே ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலிருந்து ஹாங்காங் செல்லும் பயணிகள், பயண நேரத்திற்கு 72 மணி நேரம் முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் என சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஹாங்காங் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியா தவிர, வங்காளதேசம், எத்தியோப்பியா, பிரான்சு, இந்தோனேசியா, கஜகஸ்தான், நேபாளம், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளும் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும் என ஹாங்காங் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லி - ஹாங்காங் இடையேயான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்து ஹாங்காங் வந்திறங்கிய பயணிகளில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக ஹாங்காங் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு டிசம்பர் 3-ம் தேதி வரை சேவையை தொடர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00