லடாக்கின் மீது இந்தியாவின் கவனத்தை திசை திருப்பும் சீனா - அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லைப் பகுதிகளில் ரகசியமாக படைகள் குவிப்பு

Nov 21 2020 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
லடாக்கின் மீது இந்தியாவின் கவனத்தை திசை திருப்பி விட்டு, வடகிழக்கு மாநில எல்லைகளில், சீனா ரகசியமாக தனது படைகளை குவித்துள்ளதுடன், ஆயுத பலத்தையும் அதிகரித்துள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இது தொடர்பாக, இரு தரப்பிலும் இதுவரை பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், சுமூகமான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், இந்தியாவின் கவனத்தை லடாக் எல்லை பிரச்னையில் திசை திருப்பி விட்டு, வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட எல்லைகளில், சீனா, ரகசியமாக தனது படைகளையும், ஆயுத பலத்தையும் அதிகரித்துள்ளது. இதன் உச்ச கட்டமாக, உத்தரகாண்ட் அருகே துன்ஜன் லா பகுதியில் கண்டெய்னர் வடிவிலான புதிய வீடுகளை சீனா அமைத்துள்ளது. தரையில் இருந்து வான்வழியாக தாக்‍குதல் நடத்தும் ஏவுகணைகள், ஏராளமான ஆளில்லா வாகனங்கள் ஆகியவற்றை நிறுத்தி உள்ளதுடன், திபெத்தில் உள்ள அதன் விமானப்படை தளத்தையும் விரிவுப்படுத்தி உள்ளது. இதனால், கிழக்கு லடாக் பிரச்னை தீவிரமடையும் நிலையில், மற்ற எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படைகளைக் கொண்டு சீனா தனது தாக்குதலைத் தொடுக்‍கும் எனக்‍‍ கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00