போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகார் - பாலிவுட் நகைச்சுவை நடிகை பார்தி சிங் கைதை தொடர்ந்து கணவரையும் கைது செய்த போலீசார்

Nov 22 2020 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
போதைப் பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் காமெடி நடிகை பார்தி சிங் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கணவர் ஹார்ஷ் லிம்பாச்சியாவையும் தேசிய போதைப் பொருள் தடுப்புப்‍ போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு பிறகு, பாலிவுட் வட்டாரத்தில், போதைப் பொருள் பயன்பாடு விவகாரம் தலைதூக்கியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசிக்கும் பாலிவுட் நகைச்சுவை நடிகை பார்தி சிங் வீட்டில், போதைப் ​பொருள் தடுப்புப்‍ போலீசார் நேற்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்து போதைப் பொருளான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நடிகை பார்தி சிங்கையும் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக, நடிகை பார்தி சிங்கின் கணவரான ஹார்ஷ் லிம்பாச்சியாவிடமும் போதைப் பொருள் தடுப்புப் போலீசார் இன்று காலை விசாரணை நடத்தினர். அப்போது, போதைப் பொருள் உட்கொண்டதை அவர் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில், நடிகை பார்தி சிங்குக்கும், அவரது கணவர் ஹார்ஷ் லிமபாச்சியாவுக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00