கொரோனா தொற்றை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு - ஆள் அரவின்றி வெறிச்சோடியது அகமதாபாத் நகரம்

Nov 22 2020 2:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் முழு ஊரடங்கால் அங்குள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

குஜராத்தின் அஹமதாபாத் நகரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டோரின் எண்ணிக்‍கை அதிகரித்ததையடுத்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அஹமதாபாத் மாநகராட்சி முழுவதும், 57 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்‍கு தொடங்கிய இந்த ஊரடங்கு, நாளை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நகரின் பிரதான சாலைகள் தொடங்கி பல்வேறு பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00