மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை நோக்‍கி பேரணி - ஹரியானாவில் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம் - தண்ணீரை பீய்ச்சியடித்த போலீசார்

Nov 26 2020 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேளாண் சட்டங்களை கண்டித்து, டெல்லி நோக்கி பேரணியாக சென்ற பஞ்சாப் விவசாயிகள் ஹரியானா அருகே போலீசாரின் தடுப்புகளை தாண்டிச் சென்றபோது, போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்து, 'Delhi Chalo' என்ற பெயரில் பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி கண்டன பேரணியாக சென்றனர். விவசாயிகளை தடுக்க வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பேரணி ஹரியானா மாநிலம் அம்பாலா அருகே சென்றபோது, போலீசார் கண்ணீர்புகைகுண்டு மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து விவசாயிகளை தடுக்க முயன்றனர்.

அப்போது, போலீசாரின் தடுப்புகளை மீறிய விவசாயிகள், தடுப்புகளை ஆற்றில் தூக்கி விசினர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஹரியானா போலீசாரின் தாக்குதலுக்கு அஞ்சாத விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தியபடி, போலீசாரின் வாகனங்கள் மீது ஏறி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை, தங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் முழக்கமிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00