நிவர் புயல் பாதிப்புகள் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களிடம் கேட்டறிந்த மத்திய அமைச்சர் அமித் ஷா - தேவையான உறுதிகள் வழங்கப்படும் என உறுதி
Nov 26 2020 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புயல் பாதிப்புகள் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக திரு.அமித் ஷா தனது டுவிட்டரில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் பாதிப்புகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் இதுகுறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தெரிவித்துள்ளார். தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்றும், ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் திரு, அமித் ஷா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.