கொரொனா தொற்று அதிகரிப்பு எதிரொலி : தேவைப்பட்டால் இரவு நேரங்களில் ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை
Nov 26 2020 4:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, இரவு நேர கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம். அதே நேரத்தில், முழு ஊரடங்கு அமல்படுத்த, மத்திய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும்' என, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு தொடர்பாக, டிசம்பர் 1 முதல் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்து, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உள்துறை புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்தியில், நாடு முழுதும் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது.
அதே நேரத்தில், பண்டிகை காலம், குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில், சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்து உள்ளது.இதையடுத்து, வரும், டிசம்பர் 1 முதல், 31ம் தேதிவரை கண்காணிப்பு, கட்டுப்பாட்டு மற்றும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வைரஸ் பரவலைத் தடுக்க, இரவு நேர கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம். அதே நேரத்தில், கட்டுப்பாடு பகுதியைத் தவிர மற்ற இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க, மத்திய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.