பீகாரில் புதிதாக முதலமைச்சர் பதவியேற்ற நிதிஷ் குமாரின் ஆட்சியைக்‍ கலைக்க சதி? : பாஜக எம்.எல்.ஏ.விடம் லாலு பிரசாத் யாதவ் பேரம் பேசும் ஆடியோவால் சர்ச்சை

Nov 26 2020 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
பீகாரில் புதிதாக முதலமைச்சர் பதவியேற்ற நிதிஷ் குமாரின் ஆட்சியைக்‍ கலைப்பதற்காக பாஜக எம்எல்ஏவிடம் லாலு பிரசாத் யாதவ் பேரம் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதாதளம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 243 இடங்களில் 126 இடங்களை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த கூட்டணி சார்பில் திரு. நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார். இந்த தேர்தலில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த கூட்டணிக்கு 110 இடங்கள் மட்டுமே கிடைத்தன. அங்கு சட்டசபையின் புதிய சபாநாயகராக பா.ஜனதாவின் விஜய் குமார் சின்கா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், நிதிஷ் குமாரின் ஆட்சியைக்‍ கலைக்‍கும் நோக்‍குடன் பாஜக எம்எல்ஏ ஒருவருடன் லாலு பிரசாத் யாதவ் பேரம் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00